செவ்வாய், 27 செப்டம்பர், 2022
Study material தேடி ஓடாதீர்கள்
முக்கிய விதி அளவுக்கு அதிகமான கருவிகள் வேலை செய்யவிடாது அதுபோல் பொருந்தாத கருவியை வைத்தும் வேலை செய்ய இயலாது .எனவே TNPSC படிக்க வேண்டிய Study material சரியானதையும் தேவையான அளவு மட்டும் வாங்குங்கள் ஒரே புத்தகத்தில் தொடர்ந்து படிப்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள் இதில் நான் கூற வருவது புரியவில்லை என்றால் jerrythinktank@gmail என்ற இ-மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்
ஞாயிறு, 25 செப்டம்பர், 2022
கணிதம் என்பது எளிது தான்
பெரும்பாலும் TNPSC தேர்வு எழுதுபவர்கள் கணிதத்தை ஒரு வெற்றி தடையாக சொல்வது உண்டு பள்ளி படிப்பு கணிதம் போன்றது அல்ல TNPSC கணிதம் இதற்கு இங்கு shortcut உண்டு சரியான கணித shortcut களை தேடி கண்டுபிடிக்க சில காலம் எடுக்கலாமே தவிர shortcut களை பயன்படுத்துவது சுலபம் தான் கணக்கில் 25 ற்கு 22 சரியாக செய்தாலே நீங்கள் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்
சனி, 24 செப்டம்பர், 2022
கேள்வியை முழுமையாக படிக்காவிட்டால்
TNPSC தேர்வில் பொதுவாக செய்யும் தவறுகளில் முக்கியமான தவறு கேள்வியை முழுமையாக வாசித்து முடிக்காமல் விடை தேர்வு செய்வது உதாரணமாக எதிர்சொல் தேர்வு செய்க என்ற இடத்தில் கேள்வியை முழுமையாக படிக்காமல் சரியான பொருளை தேர்வு செய்து தவறு செய்வது கேள்வியை முழுவதும் வாசிக்காமல் தவறு செய்யும் வினாக்கள் சராசரியாக 5 கேள்விகள் இவை உங்கள் வெற்றியை வெகுவாக பாதிக்கும்
வெள்ளி, 23 செப்டம்பர், 2022
தினமும் படிக்கவேண்டிய தமிழ்
Tnpsc படிப்பவர்கள் நீங்கள் என்றால் உங்கள் மொழிபாடம் தமிழ் என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய செயல் ஒன்று உண்டு.அது தினமும் எழுந்து தமிழ் புத்தகத்தை படிப்பதன் மூலம் உங்கள் நாளை தொடங்குவது.ஆரம்பத்தில் ஒரு வகுப்பு தமிழ் புத்தகத்திற்கு ஒரு வாரம் என ஆரம்பித்தாலும் சில மாதங்களில் ஒரு நாளில் சில மணி நேரங்களில் ஒரு தமிழ் புத்தகத்தை திருப்புதல் செய்யும் அளவிற்கு பயிற்சி பெறுங்கள்
வியாழன், 22 செப்டம்பர், 2022
Tnpsc தேர்வு தயாரிப்பில் consistency - சரியான தொடர்முயற்சி என்ற பெரும் ஆயுதம்
Tnpsc படிக்க தொடங்குபவர்களாக இருந்தாலும் இல்லை தற்போது தான் படிக்க தொடங்குகிறீர்கள் என்றாலும் உங்களிடம் இருக்கவேண்டிய முதல் தகுதி consistency இதை தமிழில் தொடர்முயற்சி என்பார்கள் ஆனால் அந்த தொடர்முயற்சி தொய்வில்லாமல் இருக்க வேண்டும்.இயந்திரங்கள் வருவதற்கு முன்பு பாறை உடைப்பதை பார்த்திருப்பீர்கள் பாறை மீது நூற்றுக்கணக்கான அடிகளுக்கு மேல் அடி விழுந்து இருந்தாலும் அது உறுதியாக இருப்பது போல் தான் இருக்கும் ஆனால் அந்த பாறை உடைய கூடிய கடைசி அடியில் இரண்டு சம துண்டுகளாக உடையும் கடைசி அடியில் பாறை உடைய முதல் அடியும் காரணம் எனவே நிதானமான வேகத்தில் தொடர்ந்து வெற்றி பெறும் வரை படிப்பதே tnpsc ன் அடிப்படை தகுதி
36900 சம்பளத்தில் அரசு வேலை TNPSC அறிவிப்பு வெளியீடு
36900+DA சம்பளத்தில் அரசு பணிக்கான அறிவிப்பினை TNPSC வெளியிட்டுள்ளது
பதவி:Jailor
விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.10.2022
ஊதியம் : level 18( 36900 - 135100)
கல்வி தகுதி : பட்டப்படிப்பு
ஞாயிறு, 18 செப்டம்பர், 2022
நடப்பு நிகழ்வுகள் 19/09/2022
1.நான்மடோல் -ஐப்பானை தாக்கும் புயல்
2.சிவிங்கி புலிகள் - நமீபியா நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கி புலிகள் மத்தியப்பிரதேசம் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளன
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)
1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...
-
இந்தியாவில் கடக ரேகை கடந்து எல்லும் மாநிலங்கள் - 8 MGR Wife Janaki Tamilnadu Chief Minister M - Madhya pradesh G - Gujarat R - Rajasthan...
-
தலைவர்களும் அவர்களின் சிறப்புப் பெயர்களும் : இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் நைட்டிங்கேல் - கவிக்கு...